1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (09:35 IST)

அயர்லாந்து செல்லும் இந்திய அணிக்குக் கேப்டனாக பும்ரா!

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த ஆசியக்கோப்பைக்கு முன்பாக இந்திய அணியின் பந்துவீச்சாளர் பூம்ரா முதுகுப் பகுதியில் காயமடைந்தார். அதனால் அவர் அணியில் இருந்து விலகினார். ஆனால் காயம் முழுவதுமாக குணமடைவதற்குள் அவர் மீண்டும் அணியில் அழைக்கப்பட்டார். அதனால் மீண்டும் காயமாகி அவர் கடந்த ஆண்டு டி 20 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்தார்.

இதையடுத்து இந்த ஆண்டு ஐபிஎல் தொடரையும் மிஸ் செய்த அவர், இப்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு இந்திய அணிக்குள் கம்பேக் கொடுத்துள்ளார். இந்திய அணி அடுத்து அயர்லாந்து சென்று அங்கு டி 20 போட்டிகளில் விளையாட உள்ளது. அதற்கான அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த அணிக்கு கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். துணைக் கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.

அணி விவரம்

ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணைக் கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (WK), ஜிதேஷ் சர்மா (WK), ஷிவம் துபே, டபிள்யூ சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், அவேஷ் கான்.