1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 2 ஆகஸ்ட் 2023 (07:31 IST)

மூன்றாவது போட்டியில் இந்திய அணி பிரம்மாண்ட வெற்றி… தொடரையும் கைப்பற்றியது!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் போட்டி நடைபெற்றது. அதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியிலும் இந்திய அணியில் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டது. ஹர்திக் பாண்ட்யா தலைமை தாங்கினார்.

முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு இஷான் கிஷான் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சிறப்பான தொடக்கம் அமைத்துக் கொடுக்க, பின் வந்த வீரர்கள் அதிரடியாக விளையாடி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் சேர்த்தனர்.

பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 200 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்திய அணி ஒருநாள் தொடரையும் வென்றுள்ளது. அடுத்து 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடர் நடக்க உள்ளது.