திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 2 ஆகஸ்ட் 2023 (07:37 IST)

தக்காளி விலை இன்று குறைவு.. சென்னையில் ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?

Tomato
கடந்த சில நாட்களாக தக்காளி விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் நேற்று முன்தினம் ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை விற்பனையானது என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் நேற்று முதல் தமிழகம் முழுவதும் 500 ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில் தக்காளியின் வரத்து இன்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகமானதை அடுத்து குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
 இன்று ஒரே நாளில் தக்காளி ஒரு கிலோவுக்கு பத்து ரூபாய் குறைந்துள்ளதாகவும் நேற்று 170 என விற்பனையான நிலையில் இன்று 160 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் படிப்படியாக இனி தக்காளி விலை குறைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva