1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Pakistan people want PM like modi

எங்களுக்கும் மோடி போன்று பிரதமர் வேண்டும்: பாகிஸ்தான் மக்கள் விருப்பம்..!

modi
எங்களுக்கு இந்திய பிரதமர் மோடி போன்ற பிரதமர் வேண்டும் என பாகிஸ்தான் மக்கள் ஊடகங்களில் பேட்டி அளித்து வருவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில மாதங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து அந்நாடு திவால் ஆகும் நிலையை எட்டி உள்ளது. பாகிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை எட்டியுள்ள நிலையில் அந்நாட்டு மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் தொலைக்காட்சி பேட்டிகளில் பாகிஸ்தான் இளைஞர்கள் இந்திய பிரதமர் மோடியை பாராட்டியதோடு எங்களுக்கும் மோடி போன்ற ஒரு பிரதமர் வேண்டும் என்று பேசி உள்ளனர். கடந்த எட்டு ஆண்டுகளில் மோடி இந்தியாவை சரி செய்து புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் இந்தியாவையும் பாகிஸ்தானையும் இப்போது ஒப்பிடவே முடியாது என்றும் கூறுகின்றனர்.
 
மேலும் வெளிநாடுகளிலும் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் மோடி தனது நாட்டிற்காக தன்னலம் இன்றி உழைத்து வருகிறார் என்றும் கூறி வருகின்றனர். 
 
நான் மோடியை மிகவும் நேசிக்கிறேன் நமக்கும் மோடி போன்ற ஒரு தலைவர் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்றும் பேட்டி அளித்து வருகின்றனர். இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
முதியவர்களை ஏமாற்றி பல கோடி முறைகேடு.. அமெரிக்காவில் இந்தியருக்கு 51 மாதம் சிறை தண்டனை..!