வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 26 பிப்ரவரி 2023 (09:39 IST)

3 நாட்களில் தோற்றுப்போவதை ஏற்றுக்கொள்வது கடினம்! – ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்!

Greg Chappell
ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் இடையே டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடந்து வரும் நிலையில் ஆஸ்திரேலிய அணியின் தொடர் தோல்வி பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பிப்ரவரி 17 தொடங்கி நடந்து வருகிறது. இந்த போட்டிகளில் முதல் போட்டியில் விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிப்பெற்றது. அதை தொடர்ந்து சமீபத்தில் நடந்து முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மிகவும் குறைந்த இலக்கில் ஆஸ்திரேலியாவை இந்தியா வென்றுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்களே எடுத்த நிலையில் 4 விக்கெட் இழப்பில் 118 ரன்களை குவித்து இந்தியா வென்றது. ஆஸ்திரேலிய அணியின் மிக மோசமான ஆட்டமாக இந்த போட்டி பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணியின் இந்த படுதோல்வி குறித்து பேசியுள்ள முன்னாள் ஆஸ்திரேலிய அணி வீரரும், முன்னாள் இந்திய அணி பயிற்சியாளருமான க்ரேக் சேப்பல் “இந்துயாவில் ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு பதிலாக கூடுதலாக இரு சுழற்பந்து வீச்சாளரை சேர்த்தால் அது வெற்றிக்கு உதவாது. வேகப்பந்து வீச்சுதான் அணியின் வெற்றி. ஒரு சிறந்த அணியால் தோற்கடிக்கப்படுவதை ஆஸ்திரேலிய ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் 3 நாட்களுக்கு தோல்வி என்பது ஏற்றுக்கொள்ள கடினமான ஒன்று” எனத் தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K