திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 25 பிப்ரவரி 2023 (19:17 IST)

மகளிர் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜெர்ஸி அறிமுகம்

women mumbai indians
மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணியின் ஜெர்சியை அணியின் நிர்வாகம் இன்று அறிமுகம் செய்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஆண்கள் ஐபிஎல் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதைப் பின்பறி பல நாடுகளிலும், இதேபோல் போட்டி நடந்து வருகிறது.

இந்த நிலையில்,மகளிருக்கும் ஐபிஎல் நடத்த வேண்டுமென்று  கோரிக்கை எழுந்த நிலையில், இந்த ஆண்டு முதல் மகளிர் ஐபிஎல் போட்டியில் நடைபெற உள்ளது. இதில், ஐந்து அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன என்பதும் 90 வீராங்கனைகளின் ஏலம் சமீபத்தில் நடைபெற்றது.

இந்த நிலையில் பிசிசிஐ சில நாட்களுக்கு முன் மகளிர் ஐபிஎல் போட்டி காண அட்டவணையை வெளியிட்டது. வரு,  மார்ச் 5ஆம் தேதி போட்டிகள் தொடங்கவுள்ளது.

இன்று,  மகளிர் மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணியின் ஜெர்சியை அணியின் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.