ஈரானில் 787 பேர் போரால் மரணம்.. ஈரான் பதிலடியில் 6 அமெரிக்க வீரர்கள் பலி.. தொடரும் போரால் பதட்டநிலை..!
அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டணிக்கும் ஈரானுக்கும் இடையிலான நேரடி ராணுவ மோதல் ஐந்தாவது நாளாக இன்றும் தீவிரமடைந்துள்ளது. இஸ்ரேலிய படைகள் ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது 'பெரிய அளவிலான' வான்வழி தாக்குதல்களை தொடங்கியுள்ளன.
இந்த தாக்குதலின் போது தெஹ்ரான் வான்பரப்பில் போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகள் மற்றும் பெய்ரூட் நகரப் பகுதிகளிலும் இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடுத்துள்ளது.
கடந்த ஐந்து நாட்களில் ஈரானில் 787 பேரும், லெபனானில் 60 பேரும், இஸ்ரேலில் சுமார் 12 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆறு அமெரிக்க வீரர்களும் இந்த மோதலில் பலியாகியுள்ளனர். இதற்கு பதிலடியாக, வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நலன்களை இலக்கு வைத்து ஈரான் எதிர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
சர்வதேச நாடுகளின் அமைதி முயற்சிகள் தோல்வியடைந்து வரும் நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியம் ஒரு முழு அளவிலான போரை நோக்கி நகர்ந்து வருவது உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva