1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. More than two crores people tested positive

2 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

உலகம்
உலகில் சுமார் 200 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்திற்கே சவால் விடுத்துள்ள நிலையில் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் இரண்டு கோடியை தாண்டிவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் உலக அளவில் 7.3 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பதும் 1.31 கோடி பேர் குணம் அடைந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
அமெரிக்காவில் ஒரே நாளில் 49,033 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 52.50 லட்சமாக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 537 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 1.66 லட்சமாக அதிகரித்துள்ளது. 
 
பிரேசிலில் ஒரே நாளில் 21,888 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 30.57 லட்சமாக அதிகரித்துள்ளது என்பதும், கொரோனா  தொற்றால் ஒரே நாளில் 721 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 1.01 லட்சமாக அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
சீனாவில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 84,668 ஆக அதிகரித்துள்ளது. 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
20 பொருட்களுக்கு கூடுதல் சுங்கவரி: சீனாவிற்கு எதிராக இந்தியாவின் அதிரடி நடவடிக்கை