வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Modified: திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (19:22 IST)

TIk TOk ….பாதிப்பை ஏற்படுத்தும் - Micro Soft நிறுவனர் பில்கேட்ஸ்

சீனாவை சேர்ந்த டிக்டாக் செயலியை அரசு வழங்கிய சாதனங்களில் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே சமீபத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்திய அரசு அதிரடியாக 59 சீன செயலிகளுக்கு தடை விதித்தது. இந்தியாவில் மிக அதிகமானோர் உபயோகப்படுத்தி வந்த டிக்டாக், ஹலோ ஆகிய செயலிகளும் இதில் அடங்கும்.

ஏற்கெனவே கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து 59 செயலிகளும் நீக்கப்பட்டிருந்த நிலையில் ஏற்கனவே உபயோகத்தில் இருந்த செயலிகளையும் நெட்வொர்க் நிறுவனக்கள் மூலமாக மத்திய அரசு தடை செய்துள்ளது. இந்நிலையில் டிக்டாக் செயலியை அமெரிக்காவும் தடை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகின.

தற்போதைய தகவலின் படி, அமெரிக்காவின் ஃபெடரல் ஊழியர்கள் சீனாவை சேர்ந்த டிக்டாக் செயலியை அரசு வழங்கிய சாதனங்களில் பயன்படுத்த தடை விதிக்கப்பட உள்ளது. இதற்கான உத்தரவு அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது.

பயனர் விவரங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தலாம் என்ற அச்சம் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விரைவிலேயே மைக்ல்ரோன் சாப்ட் நிறுவனத்திற்கு டிக்டாக்கை விற்கும்படி அடிபர் டிரம்ப் கூறியதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் உலகப் பிரபலமானடிக்டாக்கை மைக்ரோசாப்ட் நிறுவனம் 50 பில்லியன் டாலர்களுக்கு வாங்கவுள்ளதக தகவல்கள் வெளியான நிலையில் அந்நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் டிக்டாக்குடன் ஒப்பந்தம் மேற்கொள்வது பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஓனர் மைக்ரோப் சாஃப்ட் நிறுவனத்தின் இணைநிறுவனர், டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட்டான்ஸிடன் ( byte  dance ) உடன் மேற்கொள்ளபடும் ஒப்பந்தம் என்பது ஒரு விஷக்கோப்பை எனவும், என்கிரிப்சன் பிரச்சனை நீடிக்கும் நிலையில் இணையதளத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது சிரமம் என தெரிவித்துள்ளார்.