புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இறந்துபோன மனைவி: கணவரின் வித்தியாசமான முயற்சி

புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இறந்த மனைவி
siva| Last Updated: செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (07:25 IST)
புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இறந்த மனைவி
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் இறந்து போன தனது மனைவியை அச்சு அசலாக தனது புது மனை புகு விழா நிகழ்ச்சிக்கு வர வழைத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது

கர்நாடக மாநிலத்திலுள்ள பெல்லாரி என்ற பகுதியில் சீனிவாசகுப்தா என்ற தொழிலதிபர் சொந்தமாக வீடு ஒன்று கட்டி வந்தார். மனைவிக்காக ஆசை ஆசையாய் கட்டி வந்த இந்த வீட்டின் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது திடீரென அவரும் அவரது மனைவி விபத்து ஒன்றில் அகாலமரணம் அடைந்தார்

மனைவிக்காக கட்டப்பட்ட வீட்டின் புதுமனை புகுவிழாவில் அவர் இல்லையே என்ற வருத்தத்தில் இருந்த சீனிவாசா குப்தா அவர்களுக்கு திடீரென மெழுகு பொம்மையை செய்யும் ஐடியா வந்தது. இதனை அடுத்து தனது மனைவியைப் போலவே அச்சு அசலாக மெழுகு பொம்மை ஒன்றை செய்து அவருக்கு பிடித்த பிங்க் நிற சேலையுடன் கூடிய மெழுகு பொம்மையை வீட்டிற்கு வரவழைத்தார்
இந்த மெழுகு பொம்மையை பார்த்த அவரது மகள்கள் இறந்து போன தங்கள் அம்மாவே உயிரோடு வந்து விட்டதை போல மகிழ்ச்சி அடைந்தனர். மனைவியின் மெழுகு பொம்மையை சோபாவில் உட்கார வைத்து புது மனை புகு விழா நிகழ்ச்சியை கணவர் நடத்தியதன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது அந்த மெழுகுச் சிலையுடன் அவரது மகள்கள் மற்றும் உறவினர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :