வெள்ளி, 4 ஏப்ரல் 2025

தின பலன்கள்

வெப் ஸ்டோரி

மேலும் காண்க

எல்லாம் காட்டு

வக்பு சட்டத்திருத்தத்திற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் போராட்டம்!

வக்பு சட்டத்திருத்தத்திற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் போராட்டம்!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் தவெகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். வக்பு சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இந்த சட்டத்திருத்தம் அரசியலமைப்பின் மாண்மை கேள்வி உள்ளாக்குவதாக தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்திருந்தார்.

எல்லாம் காட்டு

ரொம்ப நாள் ஆசை.. தன்னை இந்திய கிரிக்கெட் வீரராக மாற்றிக் கொண்ட சாட்ஜிபிடி ஓனர்!

ரொம்ப நாள் ஆசை.. தன்னை இந்திய கிரிக்கெட் வீரராக மாற்றிக் கொண்ட சாட்ஜிபிடி ஓனர்!

தற்போது உலகம் முழுவதும் Ghibli art style ஐ வைரலாக்கிய சாட்ஜிபிடி நிறுவனர் சாம் அல்ட்மேன் தன்னை இந்திய கிரிக்கெட் வீரராக வர்ணித்து போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். ஏஐ தொழில்நுட்பத்தில் உலகம் முழுவதும் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தியது Open AI-ன் ChatGPT. சமீபத்தில் சாட்ஜிபிடி மூலமாக கிப்ளி ஸ்டைல் ஆர்ட் செய்வது வைரலாகியுள்ளது. உலகம் முழுவதும் ஏராளமான மக்கள், ஜப்பானிய அனிமே பாணியான கிப்ளி ஸ்டைலில் தங்கள் புகைப்படங்களை மாற்றி வரும் நிலையில், இதுகுறித்து படைப்பாளிகளிடையே எதிர்ப்பு குரலும் எழுந்து வருகிறது.

உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவது யாருக்கு லாபம்?