வெள்ளி, 4 ஏப்ரல் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 4 ஏப்ரல் 2025 (09:39 IST)

தங்க கடத்தல் நடிகை ரன்யாவிடம் இருந்து விவாகரத்து கேட்கும் கணவர்.. நீதிமன்றத்தில் மனுதாக்கல்..!

Ranya Rao
தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கி சிறையில் இருக்கும் நடிகை ரன்யாவிடம் விவாகரத்து வேண்டும் என்று அவரது கணவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன் துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், ரன்யாவிடம் இருந்து விவாகரத்து பெற அவரது கணவர் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில், "நாங்கள் திருமணம் செய்து கொண்ட நாளிலிருந்து வேதனையும் துயரத்தையும் அனுபவித்து வருகிறேன். இன்று விவாகரத்து கேட்க முடிவு செய்துள்ளேன்," என தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் தனது மனைவி ரன்யாவிடம் இருந்து விவாகரத்து பெற்று தர வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva