1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 2 ஏப்ரல் 2025 (19:48 IST)

சிறுநீரக கற்கள் உருவாகுவதை எப்படி தடுப்பது?

Kidney Stones 1
சிறுநீரகத்தில் உருவாகும் தூள்கள், உப்புகள் மற்றும் மூலக்கூறுகள் படிவாகி கற்களாக மாறுவது சிறுநீரக கற்கள் எனப்படும். இவை பல வகைப்படும்
 
கால்சியம் ஆக்சலேட், யூரிக் அமிலம், ஸ்டுரைட், கால்சியம் பாஸ்பேட், சிஸ்டீன், ஷேந்தீன் போன்றவை. இந்நோயின் அறிகுறிகள் முதுகு மற்றும் விலா பகுதியில் தீவிர வலி, சிறுநீர் கழித்தலில் எரிச்சல், வாந்தி, சிறுநீரின் நிறம் மாறுதல் போன்றவை.
 
கற்கள் உருவாதலை தடுக்க உணவில் கேரட், பப்பாளி, முருங்கைக்காய் போன்றவை சேர்க்க வேண்டும். பொட்டாசியம் சத்து உள்ள உணவுகளான இளநீர், பீன்ஸ், வாழைப்பழம் பயனுள்ளவை. சிட்ரிக் அமிலம் கற்களை கரைக்க உதவும்
 
எனவே எலுமிச்சைச்சாறு, சாத்துக்குடி, ஆரஞ்சு போன்றவை உணவில் சேர்க்கலாம். கால்சியம், வைட்டமின் D சரியாக இருக்க வேண்டும். உப்பு, தக்காளி விதைகள், பீட்ரூட் போன்றவற்றை கட்டுப்படுத்த வேண்டும். 
 
நீர்ச்சத்து உள்ள காய்கறிகளை தோல் நீக்கி சாறாக உண்ணலாம். பார்லி தண்ணீர், குளிர்ந்த நீர் அதிகம் குடிக்க வேண்டும். சிறுநீர் அடக்காமல் கழித்தல் மற்றும் வாரத்திற்கு ஒருமுறை எண்ணெய் குளியல் எடுத்தல் உடலுக்கு நல்லது.

Edited by Mahendran