மன்னார்குடி, புகழ்பெற்ற ராஜகோபால சுவாமி திருக்கோவிலில் பங்குனி திருவிழா..!
திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மன்னார்குடி, புகழ்பெற்ற ராஜகோபால சுவாமி திருக்கோவில், வைணவ சமயத்தின் முக்கிய தலங்களில் ஒன்றாக திகழ்கிறது.
இந்த கோவில், ஆண்டு முழுவதும் உற்சவங்களால் சுற்றி வரும் சிறப்புமிக்க தளங்களில் ஒன்றாக விளங்குகிறது. பங்குனி மாதத்தில் நடைபெறும் ஒரு மாத நீடித்த திருவிழா, இந்த கோவிலின் முக்கிய விழாவாக விளங்குகிறது. இந்த விழாவின் போது 18 நாட்கள் உற்சவமும், 12 நாட்கள் விடையாற்றியும் நடைபெறும் நிகழ்வுகள் பெரும் கவனத்தை ஈர்க்கின்றன.
இந்த ஆண்டு, பங்குனி திருவிழா மார்ச் மாதம் 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற விழாவிற்கு முன்னதாக, பெருமாள் சன்னதிக்கு எதிரே அமைந்துள்ள பெரிய கொடிமரத்திற்கு பூஜைகள் நடைபெற்று, கருட பகவான் உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.
விழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் ராஜகோபால சுவாமி வீதி உலா நடத்தி வருகிறார். இந்த வீதி உலாவை கண்டு மகிழ தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்து கொண்டிருக்கிறார்கள்.
Edited by Mahendran