செவ்வாய், 18 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 18 மார்ச் 2025 (13:47 IST)

பட்ஜெட் விலையில் தேவையான அம்சங்களுடன் வெளியான Realme P3 5G!

Realme P3 5G

இந்தியாவில் பட்ஜெட் விலையில் பல ஸ்மார்ட்போன் மாடல்களை வெளியிட்டு வரும் ரியல்மி நிறுவனம் தற்போது பட்ஜெட் விலையில் புதிய Realme P3 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

 

இந்த Realme P3 5G ஸ்மார்ட்போனின் கேமரா உள்ளிட்ட அம்சங்கள் பொதுவாகவே இருந்தாலும், ரேம், மெமரி போன்றவற்றில் சராசரி விலையில் அதிகபட்ச வசதிகளை வழங்கியுள்ளனர். மேலும் இது புதிய ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அப்டேட்டையும் கொண்டுள்ளது.

 

Realme P3 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:

 
  • 6.67 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே
  • குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 6 ஜென்4 சிப்செட்
  • 2.3 GHz ஆக்டாகோர் ப்ராசஸர்
  • டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வசதி
  • ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்
  • 50 MP + 2 MP ப்ரைமரி கேமரா
  • 16 MP முன்பக்க செல்பி கேமரா
  • 6 GB / 8 GB RAM + விர்ச்சுவல் ரேம்
  • 128 GB / 256 GB இண்டெர்னல் மெமரி
  • 4G, 5G, VoLTE, Bluetooth 5.2, Wifi, NFC
  • USB-C v2.0
  • 6000 mAh பேட்டரி, 45 W பாஸ்ட் சார்ஜிங், ரிவர்ஸ் சார்ஜிங்
 

இந்த Realme P3 5G ஸ்மார்ட்போன் ஸ்பேஸ் சில்வர், கோமெட் க்ரே மற்றும் நெபுலா பிங்க் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.

 

இதன் விலை (வங்கி சலுகையுடன் சேர்த்து)

 
  • 6GB + 128 GB - ₹14,999
  • 8GB + 128 GB - ₹15,999
  • 8GB + 256 GB - ₹17,999
 

Edit by Prasanth.K