தொடர்புடைய செய்திகள்
- வேணாம் ட்ரம்ப்பே.. வேற மாதிரி ஆயிடும்!? - அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு உலக நாடுகளின் ரியாக்ஷன்!
- இந்திய பொருட்கள் மீதான இறக்குமதிவரி 26% அதிகரிப்பு.. டிரம்ப் உத்தரவு..!
- உத்தர பிரதேசத்தில் புல்டோசர் போல் தமிழகத்தில் வரி வசூல்.. மக்கள் கொந்தளிப்பு..!
- சொத்துவரி செலுத்த இன்று கடைசி தினம்.. நாளை முதல் தனிவட்டி அபராதம்: சென்னை மாநகராட்சி..!
- அதிக வரி விதிக்கும் இந்தியா என்று சொன்ன டிரம்ப்.. இப்போது ஏன் திடீர் மாற்றம்?
டிரம்ப் விதித்த 26% வரி.. எந்தெந்த இந்திய பொருட்களுக்கு பாதிப்பு?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதித்துள்ள நிலையில், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கார்கள், காபி, சாக்லேட் உள்ளிட்ட பொருட்களின் வர்த்தகம் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்துள்ளது. ஏப்ரல் 2 முதல் இந்த வரி விதிப்பு நடைமுறைக்கு வரும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார். இதன்படி, இந்திய பொருள்களுக்கு 26 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு காரணமாக இந்திய பொருள்களின் ஏற்றுமதியில் பின்னடைவு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
காபி, சாக்லேட், வெண்ணெய், ஒயின் வகைகள், கார்கள், ஆடைகள், கடிகாரங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவை ஏற்றுமதி செய்யப்படும் போது, இந்த வரி விதிப்பு பெரும் சுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Edited by Siva
