1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Medical scientists request to change Monkeypox name

குரங்கு அம்மைக்கு இனி புதிய பெயர்..? – ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை!

Monkeypox
குரங்கு அம்மை நோய் என்ற பெயர் பாகுபாடு ஏற்படுத்தும் விதமாக இருப்பதால் பெயரை மாற்ற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது.

ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோய் ஐரோப்பிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. தற்போதுவரை 39 நாடுகளில் இந்த நோய் பரவியுள்ள நிலையில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 72 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆரம்பத்தில் ஆப்பிரிக்காவில் மட்டுமே இந்த நோய் அறிகுறி கண்டறியப்பட்டாலும், தற்போது ஆப்பிரிக்க தொடர்பு இல்லாமலே பல பகுதிகளில் குரங்கு அம்மை பாதிப்புகள் கண்டறியப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் ஊடகங்களில் அம்மை புண்களை சித்தரிக்க ஆப்பிரிக்க நோயாளிகளின் புகைப்படங்களை பயன்படுத்துதல் மற்றும் செய்திகளில் ஆப்பிரிக்காவை குறிப்பிட்டு மட்டுமே பேசுவது பாகுபாடு நிறைந்ததாக உள்ளதாக கூறியுள்ள ஆய்வாளர்கள் குழு குரங்கு அம்மையின் பெயரை மாற்ற வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் விரைவில் இதன் பெயர் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
மக்களின் உயிரோடு விளையாடும் விபரீதம் தேவையா? அரசுக்கு டிடிவி கேள்வி!