1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 16 ஜூன் 2022 (10:41 IST)

கோவில்களில் ஆன்மீக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சி! – அறநிலையத்துறை அனுமதி!

Temple
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் ஆன்மீக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த இந்துசமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக கொரோனா காரணமாக தமிழ்நாடு முழுவதும் கோவில்கள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையில் கோவில்களில் திருவிழாக்கள் களைகட்டி வருகின்றன.

இந்நிலையில் தற்போது கோவில்களில் ஆன்மீக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சி, இன்னிசை நிகழ்ச்சி. தேரோட்டம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்த இந்துசமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது. மேலும் கோவில் இசை நிகழ்ச்சிகளை தமிழ்நாட்டு இசை பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கொண்டு நடத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.