செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 9 ஜூன் 2022 (09:51 IST)

குரங்கு அம்மை நோய் காற்றில் பரவுமா??

கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் குரங்கு அம்மையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும். 

 
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பிலிருந்து மெல்ல மீண்டு வரும் நிலையில் தற்போது புதிதாக தோன்றியுள்ள குரங்கு அம்மை அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுக்கல், ஸ்பெயின், சுவீடன், இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 29 நாடுகளில் சுமார் ஆயிரம் பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் குரங்கு அம்மை பெருந்தொற்றாக மாறுமா என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் இருக்கும் நிலையில் குரங்கு அம்மை பெருந்தொற்றாக வாய்ப்பு இல்லை என்று இதுகுறித்து உலக சுகாதார மையம் நிறுவனம் விளக்கம் அளித்தது. மேலும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ள கொப்புளங்களை தொடுதல், அவர்கள் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்துதல் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
 
இதனிடையே குரங்கு அம்மை குறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் தனது சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளதாவது, தற்போது பெரியம்மைக்கு பயன்படுத்தப்படும் தடுப்பூசியே குரங்கு அம்மை நோய்க்கு செலுத்தப்படுகிறது. குரங்கு அம்மை நோய் காற்றில் பரவுமா என ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. 
 
கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் குரங்கு அம்மையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும். இது வரை குரங்கு அம்மை நோயால் மரணம் ஏதும் பதிவு செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.