ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 3 ஜூன் 2022 (17:36 IST)

கட்டாய மதம் மாற்றம் சட்டப்படி குற்றம்: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Delhi Court
கட்டாய மதம் மாற்றம்சட்டப்படி குற்றம் என டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்தியாவில் இந்து மதத்தில் உள்ளவர்களை கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு வருவதாக ஒரு சில மதங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்து உள்ளது
 
இந்த நிலையில் இது குறித்த வழக்கு ஒன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்த நிலையில் ஒவ்வொருவரும் தமக்கான மதத்தை தேர்வு செய்வதற்கு முழு உரிமை உண்டு என்றும், மதம் மாற யாரும் யாரையும் நிர்பந்திக்க கூடாது,  சட்டப்படி  கட்டாய மதமாற்றம் என்பது தவறானது என்றும் கட்டாய மதமாற்ற சர்ச்சை தொடர்பான வழக்கில் டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது, இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது