1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Mark Zukerberg felt sorry for the disruption

சேவை முடக்கத்துக்கு மன்னிப்புக் கேட்ட மார்க் ஸூக்கர்பெர்க்!

வாட்ஸ் ஆப்
நேற்று திடீரென பேஸ்புக், வாட்ஸாப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகள் சுமார் 7 மணி நேரம் முடங்கின. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உலகம் முழுவதும் செல்போன் பயனாளர்கள் வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு திடீரென பேஸ்புக் நிறுவனத்தின் அனைத்து செயலிகளும் முடங்கியது. இதனால் பலரும் அதிர்ச்சியடைந்த நிலையில் இன்று காலை இந்த பிரச்சினை சரி செய்யப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம் எங்கள் பயன்பாடுகள் மற்றும் தயாரிப்புகளை அணுகுவதில் சிலருக்கு சிக்கல் இருப்பதை நாங்கள் அறிவோம். முடிந்தவரை விரைவாக இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு நாங்கள் பணியாற்றி வருகிறோம், மேலும் சிரமத்திற்கு மன்னிப்பு கோருகிறோம் என்று தெரிவித்துள்ளது.

சுமார் 7 மணி நேரத்திற்கு பிறகு இந்த கோளாறு சரி செய்யப்பட்டது. இதனால் மார்க் சக்கர்பெர்க் சொத்து மதிப்பு வீழ்ச்சியடைந்தது.  சில மணி நேரங்களிலேயே 7 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பை மார்க் சந்தித்தார்.  இது இந்திய மதிப்பில் சுமார் 52 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.
இதை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் மார்க் ஸுக்கர்பெர்க் ‘பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் மற்றும் மெஸ்ஸஞ்சர் ஆகியவை திரும்ப செயல்பட உள்ளன. தடங்கலுக்கு வருந்துகிறேன். எங்கள் சேவை எவ்வளவு முக்கியமானது என அறிகிறோம்’ எனக் கூறியுள்ளார்.
About Writer
mahendran
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?