செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 4 அக்டோபர் 2021 (20:45 IST)

8 மணி நேர முடக்கத்துக்கு பின் மீண்டும் இயங்க தொடங்கிய வாட்ஸ் அப்!

8 மணி நேர முடக்கத்துக்கு பின் மீண்டும் இயங்க தொடங்கிய வாட்ஸ் அப்!
நேற்று உலகின் பல நாடுகளில் வாட்ஸ்அப் ஃபேஸ்புக் மற்றும் மின்சாரம் ஆகியவை முடங்கியது என்பதும் தொழில் காரணமாக முடங்கிய இந்த கோளாறை சரிசெய்ய தொழில்நுட்ப வல்லுநர்கள் பலர் தீவிர முயற்சி செய்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
சுமார் 8 மணி நேரம் முடங்கியது அடுத்து உலகம் முழுவதும் தகவல் தொழில்நுட்பம் பாதிக்கப்பட்டதால் பல பயனர்கள் வேறு சமூக வலைதளங்கள் மூலம் தகவல் தொடர்பை செய்து வந்தனர்
 
இந்த நிலையில் 8 மணி நேரத்திற்குப் பின்னர் மீண்டும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை இயங்குவதாகவும் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதாகவும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது
 
இதனையடுத்து தற்போது மீண்டும் பயனாளர்கள் வாட்ஸ்அப் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது