புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 4 அக்டோபர் 2021 (21:44 IST)

தற்காலிகமாக முடங்கிய பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம்!

வாட்ஸ்அப் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் திடீரென தற்காலிகமாக முடங்கியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
உலகின் நம்பர் ஒன் சமூக வலைதளங்களில் ஒன்று பேஸ்புக் என்பதும் பேஸ்புக்கின் கிளை நிறுவனம் தான் வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் பேஸ்புக் வாட்ஸ் அப் இன்ஸ்டாகிராம் ஆகிய மூன்று சமூக வலைதளங்களும் திடீரென தற்காலிகமாக முடங்கியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
உலகின் பல நாடுகளில் பேஸ்புக் வாட்ஸ் அப் இன்ஸ்டாகிராம் சேவை வரவில்லை என்றும் கூறப்படுகிறது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தொழில்நுட்ப கோளாறு காரணமாக சமூக வலைத்தளங்கள் முடங்கியுள்ளதாகவும் விரைவில் இந்த கோளாறு சரிசெய்யப்பட்டு சேவை தொடங்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது 
 
வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் சேவைகள் முடங்கி உள்ளதால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது