1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Malasiyan prime minister talks about CAA

இதே சட்டத்தை நாங்கள் மலேசியாவில் கொண்டு வந்தால்..? மலேசிய பிரதமர் விமர்சனம்

World
இந்தியாவில் கொண்டு வந்துள்ளது போலவே மலேசியாவிலும் குடியுரிமை சட்டம் கொண்டு வந்தால் என்னவாகும் என மலேசிய பிரதமர் பேசியுள்ளார்.

இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்ட திருத்தத்தால் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க உள்ளிட்ட சில நாடுகள் இந்திய அரசின் குடியுரிமை சட்டம் குறித்து தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளன.

இந்தியர்கள் பலர் பல்வேறு பணிகளுக்காக இஸ்லாமிய தேசங்களான மலேசியா, அரபு நாடுகளுக்கு பணி விசாவில் செல்கின்றனர். இந்நிலையில் இந்திய குடியுரிமை சட்டம் குறித்து பேசியுள்ள மலேசிய பிரதமர் மகாதீர் முகமது “மதசார்பற்ற நாடு என்று கூறிக்கொள்ளும் இந்தியா முஸ்லீம் மக்களின் குடியுரிமையை பறிக்க செய்யும் நடவடிக்கைகள் வருத்தமளிக்கின்றன. இதே போல் நாங்களும் சட்டம் போட்டால் இங்கும் கூட குழப்பமும், நிலையற்ற தன்மையும் உண்டாகும். அனைத்து மக்களும் பாதிக்கப்படுவார்கள்” என்று கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
இண்டர்நெட்டை முடக்குவது தான் டிஜிட்டல் இந்தியாவா?