ஹிந்துவா... முஸ்லிமா... வங்கி KYC-ல் இணையும் மத பின்னணி...
CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில், விரைவில் வங்கி KYC படிவங்களில் மத பின்னணி இணைக்கப்படலாம் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஃபெமா (இந்தியாவில் அசையாச் சொத்தை கையகப்படுத்துதல் மற்றும் பரிமாற்றம் செய்தல்) விதிமுறைகளின் படி, ஒரு நபர் (பங்களாதேஷ், பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் குடிமக்கள்), அந்த நாடுகளில் உள்ள சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்கள் (இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் மற்றும் எல்.டி.வி.) இந்தியாவில் ஒரு குடியிருப்பு அசையாச் சொத்தை மட்டுமே சுய தொழில் செய்வதற்கான குடியிருப்பு பிரிவாகவும், சுயதொழில் செய்வதற்கு ஒரே ஒரு அசையாச் சொத்தையும் மட்டுமே வாங்கலாம் என கூறுகிறது.
ஆனால், இப்போது குடியுரிமை சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருப்பதால், பாக்கிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து ஆறு சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோருக்கு வங்கிக் கணக்கைத் திறக்க அல்லது இந்தியாவில் சொத்துக்களை வாங்குவதற்கு அனுமதி வழங்கிய ஃபெமா சட்ட விதிகளில் அண்மையில் செய்யப்பட்ட மாற்றங்களின் பின்னணியில் இந்த தேவை எழுந்துள்ளது. இந்த வசதி நாத்திகர்கள், முஸ்லிம்களுக்காக செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.