இண்டர்நெட்டை முடக்குவது தான் டிஜிட்டல் இந்தியாவா?
இணைய தேவை முடக்கம் தான் டிஜிட்டல் இந்தியாவா? என சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
சமீபத்தில் இந்திய குடியுரிமைச் சட்ட திருத்தம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவின் பல மாநிலங்களில் மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் போராடி வருகின்றனர்.
போராட்டம் நடைபெறும் இடங்களில் வன்முறை வெடிப்பதால் நாட்டில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதனால் கலவரம் ஏற்படலாம் என கருதப்படும் பதட்டம் நிறைந்த பகுதிகளுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதோடு, போராட்டம் நடந்து வரும் பல பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் டெல்லியின் சில பகுதிகள், அசாமில் சில பகுதிகள் என இணைய சேவை முடக்கப்பட்ட நிலையில் தற்போது லக்னோ உள்ளிட்ட 14 மாவட்டங்களில் டெக்ஸ்ட் மெசேஸ்ஜகள் மற்றும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
இதனால் சமூக வலைத்தளங்களில் டிஜிட்டல் இந்தியா டிஜிட்டல் இந்தியா என ப்ரமோட் செய்யும் மத்திய அரசு தற்போது இணைய சேவைகளை முடக்கி வருகிறது. இண்டர்நெட்டை முடக்குவது தான் டிஜிட்டல் இந்தியாவா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.