1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Malala says about isreal palastine war

போரை நிறுத்தினால் பாலஸ்தீனுக்கு ரூ.2.5 கோடி வழங்குறேன்.. மலாலா அறிவிப்பு

மலாலா
போரை நிறுத்தினால்  பாலஸ்தீன் மக்களுக்காக இந்திய மதிப்பில் ரூ.2.5 கோடி நிவாரண உதவி வழங்குவதாக நோபல் பரிசு வென்ற   மலாலா யூசுப் தெரிவித்துள்ளார்.
 
பாகிஸ்தானை சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் மலாலா இஸ்ரேல் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு உள்ள பாலஸ்தீன் மக்களுக்காக 3 லட்சம் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் ரூ.2.5 கோடி நிதி வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 
 
பாலஸ்தீன் மக்களுக்கு உதவிகளை செய்து வரும் 3 தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்த தொகையை அவர் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
 
மேலும் காசாவில் உள்ள மருத்துவமனையில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் அதிர்ச்சி அடைந்ததாகவும், இஸ்ரேல் அரசு காசாவில் மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டு கொண்டார்
 
 போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தால் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன் மக்களுக்கு 3 3 லட்சம் அமெரிக்க டாலர்களை வழங்குகிறேன் என்றும் மலாலா தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் Foldable மொபைல்: அக்டோபர் 27ம் தேதி விற்பனை