1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
  4. PM Modi speak to Palstine president

பாலஸ்தீன அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு.. உதவிகளை வழங்குவதாகவும் உறுதி..!

மோடி
பாலஸ்தீன அதிபர் மஹ்மொத் அப்பாஸ் உடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
காசாவில் மருத்துவமனை தாக்குதலில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்த நிலையில் பாலஸ்தீன மக்களுக்கு தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்குவதாகவும் பாலஸ்தீன அதிபர் மஹ்மொத் அப்பாஸ் அவர்களுக்கு உறுதி அளித்துள்ளார்.
 
இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினையில் இந்தியாவின் நீண்டகால நிலைப்பாடு குறித்து மீண்டும் பாலஸ்தீன அதிபர் மஹ்மொத் அப்பாஸ் அவர்களிடம் வலியுறுத்தினார்
 
மேலும் பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
'எனது மகன் போல் இருந்தாய்..உன்னை இழந்த வலி'- ஹன்சிகா வேதனை