வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 17 அக்டோபர் 2023 (12:29 IST)

அந்த பக்கமாக போங்க சுடமாட்டோம்.. நம்ப வைத்து துரோகம் செய்த இஸ்ரேல்? – கொன்று குவிக்கப்பட்ட மக்கள்!

Israel attack
காசாவில் இருந்து வெளியேற அவகாசம் தருவதாக கூறி வெளியேறிய மக்களை இஸ்ரேல் ராணுவம் கொன்று குவித்ததாக வெளியாகியுள்ள செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இஸ்ரேல் – பாலஸ்தீனிய ஆதரவு ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் மூண்டுள்ள நிலையில் ஹமாஸ் ஆக்கிரமிப்பு பகுதியான காசா முனையில் இஸ்ரேல் கடுமையான போரை நடத்தி வருகிறது. இதனால் காசா முனையில் உள்ள மக்களை வெளியேறவும் இஸ்ரேல் எச்சரிக்கை அறிவிப்புகளை வான்வழியாக துண்டு சீட்டுகள் மூலமாகவும் வீசியது.

சமீபத்தில் வடக்கு காஸா பகுதியில் உள்ள பாலஸ்தீன மக்கள் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் எச்சரித்தது. ஆனால் அவர்கள் வெளியேற போதிய அவகாசம் கூட அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. அங்கு நிறைய பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், போரினால் காயம்பட்டவர்கள் உள்ள நிலையில் உடனடியாக வெளியேறுவது இயலாத காரியம் என ஐ.நா சபையும் இஸ்ரேலுக்கு அறிவுறுத்தியுள்ளது.

ஆனால் இஸ்ரேலோ மக்கள் வெளியேற வடக்கு காசாவில் உள்ள சலாஹ் அல் தீன் சாலை பாதுகாப்பானது என்றும், அங்கு தாக்குதல் நடத்த மாட்டோம் என்றும் கூறியது. அதை நம்பி ஏராளமான மக்கள் அந்த சாலை வழியாக சென்று கொண்டிருந்தபோது அந்த சாலையில் குண்டுகளை வீசி தாக்கியுள்ளது இஸ்ரேல். இந்த தாக்குதலில் குழந்தைகள் பெண்கள் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகியுள்ள நிலையில், பலரும் படுகாயமடைந்துள்ளனர்.

பாதுகாப்பான பகுதி என்று மக்களை வெளியே வர செய்து இஸ்ரேல் அவர்கள் மீது குண்டு வீசியுள்ளதால் மீதமுள்ள காசா மக்கள் இஸ்ரேல் அறிவிப்பை பொருட்படுத்தாமல் வீடுகளிலேயே இன்னமும் பதுங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

Edit by Prasanth.K