1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Kamala Harris tested corona positive

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்-க்கு கொரோனா!

Kamala Harris
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தற்போது மீண்டும் படிப்படியாக பரவி வருவதாக கூறப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
இந்தியாவில் நான்காவது அலை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் அமெரிக்காவில் இன்னும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறையாத நிலையில் தற்போது அந்நாட்டின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் அவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
 
 இதனை அவர்  வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டு துணை அதிபர் பணிகளை செய்து வருவதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது 
 
அமெரிக்க துணை அதிபருக்கு கொரோனா பாதிப்பு என்ற தகவல் அந்நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 
அடுத்த கட்டுரையில்
எல்.ஐ.சி ஐபிஓ விலை எவ்வளவு? பாலிசிதாரர்களுக்கு சலுகை உண்டா?