திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (11:15 IST)

சென்னை ஐஐடியில் மேலும் 32 பேருக்கு கொரோனா! – 100 ஐ தாண்டிய பாதிப்பு!

Chennai IIT
சென்னை ஐஐடியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்று மேலும் 32 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில நாட்களாக வெகுவாக குறைந்திருந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருந்தனர். ஆனால் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்புகள் மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது மீண்டும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஐஐடியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று ஐஐடியில் 32 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 111 ஆக அதிகரித்துள்ளது. இதில் 2 பேர் முழுவதும் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ள நிலையில் 109 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.