வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (13:46 IST)

கோவாக்சினுக்கு அனுமதி... 6 - 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு செலுத்தலாம்!

6 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான பாரத் பயோடெக்கின் கோவாக்சினுக்கு டிசிஜிஐ அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

 
ஆம், 6 - 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவசர கால பயன்பாடாக இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. முன்னதாக 6 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் பயன்படுத்துவதற்காக  தடுப்பூசி Corbevax க்கு ஒப்புதல் அளிக்க அரசாங்கக் குழு சமீபத்தில் பரிந்துரைத்தது.
 
12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ZyCov-D இன் இரண்டு டோஸ் தடுப்பூசியையும் DCGI பரிந்துரைத்துள்ளது. ZyCov-D கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்று டோஸ் தடுப்பூசி வழங்குவதற்கான அனுமதியைப் பெற்றது.
 
குஜராத்தை தளமாகக் கொண்ட Zydus Lifesciences நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ZyCov-D, உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசியாகக் கூறப்படுகிறது.