தொடர்புடைய செய்திகள்
- இதோ பாருங்க...உலகில் அதிக அளவில் கிண்டல் செய்யப்படும் நபர் யாருண்ணு தெரியுமா...?
- டாஸ் வெற்றி: மே.இ.தீ. முதலில் பேட்டிங் –கணக்கைத் தொடங்கிய அஸ்வின்
- வங்கிகளுக்கான சுவீட் செய்தி... பண மோசடி 'மல்லைய்யா' இந்தியாவுக்கு திரும்பப் போறாரு...
- ’நம் நாட்டு’ இளையோர் அசத்தல் ....இந்தியாவுக்கு ஏழாவது தங்கம்...
- புளோரிடாவை தாக்கிய மைக்கேல் புயல் – அமெரிக்காவில் 13 பேர் பலி
அமெரிக்காவுடன் பகையை வளர்க்கிறதா இந்தியா?
அமெரிக்கா ஈரான் மற்று ரஷ்யாவிடம் மோதி வரும் நிலையில், இந்தியா இந்த இரு நாட்டுடன் ஒப்பந்தளில் ஈடுப்பட்டு வருவதால் இந்தியா மீது பொருளாதாரத்தடை விதிக்கப்பட்ட அதிக வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ள நிலையில், பிற நாடுகளும் இதை கடைப்பிடிக்க வேண்டும் என அமெரிக்கா கேட்டுக் கொண்டது. ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள் வரும் 4 ஆம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வருகிறது.
இந்நிலையில், இந்தியா நவம்பரில் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை இந்தியா வாங்கும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பின்வருமாறு கூறியுள்ளார். அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ஈரான்னிடம் இருந்து 90 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் வாங்க முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் இந்த திட்டம் எந்தவகையிலும் இந்திய - அமெரிக்க உறவுக்கு உதவ போவதில்லை. நாங்கள் இந்தியாவின் நடவடிக்கை தொடர்பாக ஆலோசித்து வருகிறோம். இதற்கான முடிவை அமெரிக்க அதிபர் டிரம்ப் பார்த்துக் கொள்வார் என தெரிவித்துள்ளார்.
டிரம்பிடம் இது குறித்து கேட்ட போது, இந்திய அமெரிக்கா நட்பு நாடாக இருந்தது. இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதிக்கபப்டுமா? இந்தியா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதற்கான பதிலை விரைவில் அறிவிப்பேன் என்று தெரிவித்தார்.
அடுத்த கட்டுரையில்
