1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Heavy earthquake in Turkey

துருக்கியை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்! – பக்கத்து நாடுகள் வரை உணரப்பட்டது!

earthquake
துருக்கியில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கி நாட்டின் நர்டஹி நகரத்தின் அருகே 23 கி.மீ கிழக்கே இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 3.20 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. பொதுவாக 6.2 ரிக்டருக்கு மேல் பதிவாகும் நிலநடுக்கங்கள் சேதம் விளைவிப்பவையாக உள்ளன.

இந்த பயங்கர நிலநடுக்கத்தால் துருக்கியில் உள்ள பல கட்டிடங்கள் குலுங்கிய நிலையில் பல கட்டிடங்கள், வீடுகள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

துருக்கியில் ஏற்பட்ட இந்த பயங்கர நிலநடுக்கத்தின் அதிர்வுகள் சிரியா, லெபனான், இஸ்ரேல் உள்ளிட்ட அருகில் உள்ள நாடுகள் வரை உணரப்பட்டதால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

Edit by Prasanth.K
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
எனக்கே ஓட்டு போடுங்க.. குக்கர்களை அள்ளித்தரும் காங்கிரஸ், பாஜக! – கலகலக்கும் கர்நாடகா தேர்தல்!