சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. அந்தமானிலும் நிலநடுக்கம் என தகவல்!
சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில் அந்தமான் பகுதிகளும் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சீனாவின் வடமேற்கு பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் ரிக்டர் அளவில் இது 5.7 என பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் காரணமாக வீடுகள் கட்டிடங்கள் குழுங்கியது என்றும் இதனால் வீதி அடைந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு கட்டிடத்தை விட்டு வெளியேறினார்கள் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் எந்தவித உயிர் சேதமும் பொருள் சேதமும் இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் மக்கள் ஒரு விதமான அச்சத்துடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சீனா மட்டுமின்றி அந்தமான் நிக்கோபார் தீவு பகுதியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்தமானில் ஏற்பட்ட நிலநடக்கம் 4.9 ரிக்டர் என பதிவாகியுள்ளதாகவும் இன்று அதிகாலை 3.40 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
Edited by Siva