1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 18 ஜனவரி 2023 (21:44 IST)

இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கையா?

இந்தோனேஷியாவில் மீண்டும்  நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

தென் கிழக்கு ஆசிய  நாடுகளில் ஒன்றான இந்தோனேஷியா. இந்த நாட்டில் எரிமலைகள், மற்றும் கடலுக்கு அருகில் அமைந்திருப்பதால் அடிக்கடி பூமி அதிர்ச்சியும், நில நடுக்கம் ஏற்படும்.

 கடந்த வாரம்  இங்கு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில், இன்றும் மீண்டும் சக்தி வாய்ந்த  நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நில நடுக்கம் 6.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாகவும்,  இந்த நில நடுக்கம்  கொரண்டலோவின் தென் கிழக்கு கடலுக்கு அடியில் 147 கிலோமீட்டர் தொலையில்   உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது