திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 29 ஜனவரி 2023 (08:25 IST)

5.9 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் .. 7 பேர் பலி, 100 பேர் படுகாயம்..!

earthquake
ஈரான் மற்றும் துருக்கி எல்லையில் 5.9 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து ஏழு பேர் உயிரிழந்ததாகவும் ஈடுபாடுகளுக்கு இடையே சிக்கிய நூறு பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
வடமேற்கு ஈரானில் உள்ள கோய் என்ற நகரில் இந்த நில நடக்கும் ஏற்பட்டதாகவும் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதாகவும் அமெரிக்கா புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
மேற்கு அஜர்பைஜான் மாகாணத்தின் பல பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் அந்த பகுதியில் உள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கம் காரணமாக மக்கள் அலறி அடித்துக் கொண்டு தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறியதாகவும் நிலநடுக்கத்தில் இருந்த இடிபாடுகளுக்கு இடையே இதுவரை ஏழு பேர்களின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இந்த நிலையில் இடுப்பாடுகளை அகற்றும் பணியை மீட்பு படையினர் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva