1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. France PM affected by corona virus

பிரான்ஸ் பிரதமருக்கு கொரோனா பாதிப்பு:வீட்டில் இருந்து பணிகளை கவனிக்க முடிவு

பிரான்ஸ்
பிரான்ஸ் பிரதமருக்கு கொரோனா பாதிப்பு:வீட்டில் இருந்து பணிகளை கவனிக்க முடிவு
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்தாலும் இன்னும் ஒரு சில நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது குறையவில்லை என்பது வருத்தத்துக்குரிய ஒன்றாக உள்ளது
 
அந்த வகையில் பிரான்ஸ் நாட்டிலும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு தனது பிரதமர் பணிகளை 10 நாட்கள் தனிமையில் இருந்தே கவனிப்பார் என்றும் அவ்வப்போது தொலைபேசியில் மட்டும் அவர் சில உத்தரவுகளை பிறப்பிப்பார் என்றும் கூறப்படுகிறது
அடுத்த கட்டுரையில்
திருமணத்திற்கு மறுத்த இளைஞர்; பிறப்பு உறுப்பை வெட்டிய ஆசிரியை! – ராஜஸ்தானில் அதிர்ச்சி!