திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 23 நவம்பர் 2021 (10:43 IST)

புதிய காற்றழுத்த தாழ்வால் எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை: தமிழ்நாடு வெதர்மேன் டுவிட்

வங்கக் கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை கொண்டு இருப்பதாகவும் அடுத்த 48 மணி நேரத்தில் இது வலுப்பெறும் என்றும் ஏற்கனவே வெளியான செய்தியை பார்த்தோம்
 
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் இந்த புதிய காற்றழுத்த தாழ்வு காரணமாக ஒரு சில மாவட்டங்களில் குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கூறியுள்ளார் 
 
கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் கூடிய மாவட்டங்கள் பின்வருமாறு:  ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகை, சிவகங்கை, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், நெல்லை, கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் தெற்கு கேரளா 
 
சென்னை உள்பட வட மாவட்டங்களில் புதிய காற்றழுத்த தாழ்வால் எந்தவித பாதிப்பும் இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.