1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Today corona cases in India

முதன்முறையாக 7 ஆயிரத்திற்கும் கீழ் தினசரி பாதிப்புகள்! – கொரோனாவை விரட்டும் இந்தியா!

India
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் மெல்ல குறைந்து வந்த நிலையில் இந்த ஆண்டில் இன்று முதல் முறையாக தினசரி பாதிப்புகள் மிக குறைவாக பாதிவாகியுள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 40 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 20 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 7,579 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,45,26,480 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 236 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  4,66,147 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,39,46,749 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 1,13,584 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
ஒரே நாளில் ரூ.632 சரிந்தது தங்கம்: மகிழ்ச்சியில் பொதுமக்கள்!