வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 9 ஜூலை 2021 (17:42 IST)

தொழிற்சாலையில் தீ…52 பேர் உயிரிழப்பு

வங்காள தேசத்தில் உணவுப்பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் அங்குப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடு வங்காள தேசம். இந்நாட்டின் தலைநகர் டாக்காவிற்கு அருகிலுள்ள நாராயண் கஞ்ச் என்ற மாவட்டத்தி ரூப்கஞ்சில் ஹசீம் ஜூஸ் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

இங்கு இன்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதில், 52 பேர் உயிரிழந்தனர். இந்த தீவிபத்திலிருந்து தப்பிக்க தொழிற்சாலையின் மேல் தளத்திலிருந்து கீழே குதித்த பலர் படுகாயம் அடைந்துள்ளனர். 6 தளங்களைக் கொண்ட இத்தொழிற்சாலையீல் மேலும் பலர் வெளியேற முடியாமல் சிக்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை மற்றும் மீட்புப் படையினர் தீயை அணைக்க முயற்சித்து வருகின்றனர். புகை மூட்டும் நிலவுவதலா மீட்புப்பணியில் தாமதம் நிலவுகிறது.  இந்த விபத்தில் சுமார் 12 பேர் வரை காணவில்லை என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.