1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: வெள்ளி, 9 ஜூலை 2021 (17:06 IST)

ஆர்.ஆர்.ஆர் படத்திலிருந்து விலகிய ரஜினி பட பிரபலங்கள்!

உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆர்.ஆர்.ஆர் படத்திலிருந்து  ரஜினி பட கலைஞர்கள் விலகியுள்ளனர்.

தென்னிந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனராக உருவாகியுள்ள ராஜமௌலி பாகுபலி படத்துக்குப் பிறகு ராம் சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் , அஜய் தேவ்கான் மற்றும் ஆலியா பட் ஆகியோரை வைத்து ஆர் ஆர் ஆர் என்ற வரலாற்றுப் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஆலியா பட் மற்றும் ஹாலிவுட் நடிகை ஒருவர் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் இப்;படத்தின் சில அப்டேட்களை வெளியிட்டுள்ளது படக்குழு. அதன்படி படத்தின் காட்சிகள் எல்லாம் படமாக்கப்பட்டு விட்டதாகவும், இன்னும் இரண்டு பாடல்கள் மட்டுமே படமாக்கப்பட வேண்டி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதுபோலவே படத்தின் இரண்டு மொழிகளுக்கான டப்பிங் வேலைகளை ஜூனியர் என் டி ஆர் மற்றும் ராம்சரண் தேஜா ஆகியோர் முடித்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் மற்றொரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதில், ரஜினியின் தர்பார் படத்தில்  கண்ணுல திமிரு என்ற பாடலுக்கு நடனமாடியபடி ரஜினி சண்டைப் போடுவார். இது அனைவராலும் பாராட்டப்பட்டது.

இந்தச் சண்டைக் காட்சிகளை அமைத்தவர்கள் தெலுங்கு  பட ஸ்டண்ட் மாஸ்டர்களான இரட்டையர்கள் ராம்- லட்சுமணன்.

ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெறும் ராம்சரணுக்கான சண்டைக் காட்சிகளை அவர்கள் இயக்கியபோது, ராம்சரணுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் நீண்ட நாட்கள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது ராம்சரண் மீண்டும் நடிக்கத் தயாராகியுள்ள நிலையில் ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு தேதி ஒதுக்க முடியாத நிலையில் ராம்-லட்சுமண்ன் வேறு படத்தில் ஸ்டண்ட் காட்சிகள் அமைக்க ஒப்புக்கொண்டதாலும் இப்படத்தில் இருந்து விலகியுள்ளனர். வேறு எந்தக் காரணமும் அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.