வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : வெள்ளி, 9 ஜூலை 2021 (15:30 IST)

வீரர்களுடன் பேசும் பிரதமர் மோடி !

உலக புகழ்பெற்ற ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளன. கடந்த ஆண்டே நடத்தப்படவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதால் இந்த மாதம் 23ம் தேதி முதல் தொடங்க உள்ளது.

இந்த ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 5 வீரர்கள் உட்பட இந்தியா முழுவதிலுமிருந்து நூற்றுக்கணக்கான வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக இந்திய ஒலிம்பிக் வீரர்கள், வீராங்கனைகள் ஜூலை 17ம் தேதி ஜப்பான் புறப்படுகின்றனர். அதற்கு முன்பாக ஜூலை 13ம் தேதி  மாலை 5 மணிக்கு ஒலிம்பிக் போட்டியில் விளையாடச்  செல்லும்  இந்திய வீரர்களை காணொலி மூலமாக சந்தித்துக் கலந்துரையாட உள்ளார் பிரதமர் மோடி.

இதன்மூலம் வீரர்களுக்கு ஊக்கம் அளித்து அவர்களுக்கு உற்சாகமூட்டி வாழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது