திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : வெள்ளி, 9 ஜூலை 2021 (21:19 IST)

ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பு...மக்கள் அதிர்ச்சி

கேரளாவில் 15 பேருக்கு ஜிகா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1947 ஆம் ஆண்டு  உகாண்டா காடுகளில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஜிகா வைரஸ் மிக கொடிய வைரஸ் தொற்றாகக் கருதப்படுகிறது.

கடந்த ஐம்பது ஆண்டுகளாக இது உலகில் பெரும் தாக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது ஜிகா வைரஸ் இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது.

கேரள மாநிலத்தில் சுமார் 15 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இதுகுறித்து, தமிழக மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் ஜிகா வைரஸ் குறித்த அச்சம் வேண்டாம் என தெரிவித்துள்ளார்.