வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 9 ஜூலை 2021 (17:30 IST)

மதுரை மல்லிகைப் பூ-விற்கு புவிசார் குறியீடு

மதுரை மல்லிகைப் பூ-விற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது மதுரை மாவட்ட மக்களுக்கு தமிழத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.

புவிசார் குறியீட்டு பொருள்கள் சட்டம் 2003ல் அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டம் நடைமுறை படுத்தப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. கைவினை கலைஞர்களை பாதுகாக்கவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அந்த வகையில் தற்போது புகழ்பெற்ற மதுரை மல்லிகைப் பூ-விற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புவிசார் குறியீடு சான்றளிக்கப்பட்ட மதுரை மல்லி மற்றும் பிற பூக்கள் அமெரிக்கா மற்றும் துபாய்க்கு தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக தமிழ் நாட்டில் காஞ்சிபுரம் பட்டு, பவானி ஜமுக்காளம், மதுரை சுங்கடி சேலை, சேலம் பட்டு சேலை, ஆரணி பட்டு சேலை, கோவை கோரா காட்டன் சேலை, தஞ்சாவூர் ஓவியம், தலையாட்டி பொம்மை, நாச்சியார்கோவில் குத்துவிளக்கு, பத்தமடை பாய், தோடா மக்களின் பூ வேலைப்பாடு, சேலம் மாம்பழம், ஓசூர் ரோஜா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, திண்டுக்கல் பூட்டு, ராஜபாளையம் நாய், காரைக்குடி கண்டாங்கி சேலை, கோடாலிகருப்பூர் சேலை உள்ளிட்டவை பதிவு செய்யப்பட்டுள்ளன.

தற்போது மேலும் ஒரு மைல்கல்லாக மதுரை மல்லிக்குப் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது மதுரை மாவட்ட மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.