1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. dvac raid ended in sp velumani house

8 மணி நேர சோதனை முடிந்தது: என்ன கிடைத்தது எஸ்பி வேலுமணி வீட்டில்?

velumani
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர்களின் வீடுகளில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ் பி வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் வீட்டில் அதிமுக தொண்டர்கள் குவிந்து போராட்டம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
அதுமட்டுமின்றி சோதனை செய்து பொய் வழக்கு போடுவதால் அதிமுகவை அழித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள் என எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் கடந்த 8 மணி நேரமாக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் நடந்த சோதனை முடிவு பெற்றதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர் 
 
இதனை அடுத்து எஸ்பி வேலுமணி வீட்டில் எடுத்த ஆவணங்கள் தயார் செய்யும் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இதுகுறித்த தகவலை வெளியிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
திருமணத்திற்கு முந்தைய நாள் உயிரிழந்த மணமகன்... பெற்றோர் செய்த நெகிழ்ச்சியான செயல்!