அதிமுக தலைமை அலுவலக சாவி வழக்கு - ஓபிஎஸ் மனு தள்ளுபடி!
அதிமுக அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒப்படைக்கப்பட்டது சரிதான் என்று கூறிய உச்சநீதிமன்றம் ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகம் கடந்த ஜூலை 11 ஆம் தேதி சீல் வைக்கப்பட்ட நிலையில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் எடப்பாடி பழனிச்சாமியிடம் சாவி ஒப்படைக்கப்பட்டது
இதனை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. அதில் மனுதாரர் ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் அலுவலகத்தின் சாவியை தன்னிடம் ஒப்படைக்குமாறு உரிமை கோர முடியாது
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் உரிமை கோருகிரேன் என்ற ஓபிஎஸ் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய நீதிபதி, அதிமுக அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி இடம் ஒப்படைக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது