திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (11:24 IST)

அதிமுகவை அழிப்பதுதான் முதல்வரின் இலக்கு..! – ஜெயக்குமார் ஆவேசம்!

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தப்படுவது குறித்து அதிமுக ஜெயக்குமார் ஆவேசமாக பேசியுள்ளார்.

சமீப காலமாக அதிமுக பிரமுகர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், இன்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி வருகிறது.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக தொண்டர்கள் பலர் எஸ்.பி.வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் வீடுகளுக்கு முன்பாக திரண்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ரெய்டு சம்பவத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர் “முதலமைச்சர் காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு அதிமுகவை ஒழித்து கட்டும் நோக்கில் செயல்பட்டு வருகிறார். எதிர்கட்சிகள் செயல்படாமல் இருக்க காவல்துறையை ஏவல்துறையாக பயன்படுத்துகின்றனர். மின்சார கட்டண உயர்வை திசை திருப்பவே இந்த ரெய்டு நடத்தப்படுகிறது” என பேசியுள்ளார்.