திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் விவகாரம்.. உச்சநீதிமன்றம் சென்ற கோவில் நிர்வாகம்...
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில், உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய தனி நீதிபதியின் உத்தரவை, இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதி செய்திருந்தது. அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த முக்கிய வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம்.பஞ்சோலி அமர்வின் முன்பு வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம் நீண்ட காலமாக பேசப்பட்டு வரும் நிலையில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கோயில் நிர்வாகமே உச்சநீதிமன்றத்தை நாடியிருப்பது அரசியல் மற்றும் ஆன்மீக வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த அமர்வு அளிக்கும் தீர்ப்பு இந்த விவகாரத்தில் திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva
