தொடர்புடைய செய்திகள்
- ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து!. புதுமண ஜோடிக்கு நேர்ந்த சோகம்!...
- ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவாரா டிரம்ப்?!.. அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வருமா
- உலகில் மீண்டும் காட்டாட்சி அபாயாம்!.. ரஷ்யா, சீனா நாடுகள் வார்னிங்!..
- அதானி குழுமத்தின் மீதான அனைத்து வழக்குகளும் வாபஸ்: அமெரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
- ஈரான் போர்!.. இனிமேல் பாகிஸ்தானை நம்ப மாட்டோம்!.. அமெரிக்கா அதிருப்தி!...
நீங்கள் ஒரு பைத்தியம். நான் மட்டும் இல்லையென்றால் நீங்கள் இந்நேரம் சிறையில் இருந்திருப்பீர்கள்.. யாரை சொல்கிறார் டிரம்ப்?
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றத்திற்கு மத்தியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல் சர்வதேச அளவில் பெரும் பரவற்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களால் அதிருப்தியடைந்த ஈரான், அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தது.
இந்தச் சூழலில், நெதன்யாகுவைத் தொடர்புகொண்டு பேசிய டிரம்ப், கடுமையான சொற்களைப் பயன்படுத்தித் தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தியதாக 'ஆக்சியோஸ்' ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது.
நீங்கள் ஒரு பைத்தியம். நான் மட்டும் இல்லையென்றால் நீங்கள் இந்நேரம் சிறையில் இருந்திருப்பீர்கள். உங்கள் செயல்களால் உலக நாடுகள் அனைத்தும் உங்களையும், இஸ்ரேலையும் வெறுக்கின்றன" என்று டிரம்ப் மிகக் காட்டமாக எச்சரித்துள்ளார். இந்த காரசாரமான விவாதத்திற்குப் பிறகு, இருதரப்புத் தாக்குதல்களும் உடனடியாக நிறுத்தப்படும் என்று டிரம்ப் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இருப்பினும், இந்த உரையாடலை உறுதிசெய்த நெதன்யாகு, தங்களது மக்கள் மீதான தாக்குதலை ஹிஸ்புல்லாக்கள் நிறுத்தாவிட்டால் பெய்ரூட்டில் உள்ள பயங்கரவாத இலக்குகள் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலைத் தொடரும் என்றும், தெற்கு லெபனானில் தங்களது ராணுவ நடவடிக்கைகள் திட்டமிட்டபடி நீடிக்கும் என்றும் தனது பிடிவாதமான நிலையைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
Edited by Siva
